பிரபல ஆடை காட்சியறையில் பதற்றம்.

இலங்கையின் பிரபல ஆடை வர்த்தக நாமமான House of Fashions இன் ஊழியர்கள் குழுவொன்று வாடிக்கையாளர் ஒருவருடன் மோதலில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

 பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையத்தில் வாகன தரிப்பிட பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது.

 இந்த மோதல் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  மோதல் சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.No comments: