கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை...
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரசபடை வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராசபடைத் தெருவில் அமைந்துள்ள துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பட்டறை ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், இரவு வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லவிருந்த போதே இவ்வாறு தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற மூவர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதுடன், கொலைசெய்த நபர்கள் யார் என்பது இதுவரை வெளியாகவில்லை.
சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கோப்பாய் பொலிஸார் சந்தேகிக்கின்றனர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை தேடும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
No comments: