புதிய வரி திருத்தத்திற்கு எதிராக இன்று துறைமுகத்தில் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம்

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு துறைமுகத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று ஒரு மணி நேரம் தமது சேவையில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.


 இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷியாமல் சுமணரத்ன, இந்த நடவடிக்கைக்கு வழங்கப்படும் பதில்களுக்கு அமைய அரசாங்கம் தனது எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துமென தெரிவித்தார்.

 நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் முயற்சிப்பதாக துறைமுக அரச முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷியாமல் சுமணரத்ன மேலும் தெரிவித்தார்.No comments: