ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சூதாடிய பிரமுகர்கள் குழு கைது.

 நீர்கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சூதாடிக் கொண்டிருந்த பிரமுகர்கள் உட்பட உயர்தர வர்த்தகர்கள் இருபத்தொருவரை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழு கைது செய்துள்ளது.


சூதாட்டக்காரர்களை  பொலிஸ் உத்தியோகத்தர்  சோதனை நடாத்தினர்.


 அப்போது அங்கிருந்த சுமார் 5 லட்சம் பணத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.


 சட்டத்தில் இருந்து தப்பிக்க சில சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் பல்வேறு தந்திரங்களை செய்த போதிலும், சட்டத்தை அப்படியே அமுல்படுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



No comments: