விபத்தில் உயிரிழந்த பெற்றோர் - சாதித்து காட்டிய மலையக மாணவி
கடந்த 2021 மார்ச் 20ஆம் திகதி பசறை 13ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியாகினர்.
அந்த விபத்தில் அந்தோனி நோவா (வயது – 32) என்பவரும், அவரது மனைவியான பெனடிக் மெடோனோ(வயது 31) உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் புதல்வியே யூஜீனியா பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியாக புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
பெற்றோர் உயிரிழக்கும் போது சிறுமி தரம் மூன்றில்கல்வி பயின்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: