இலங்கை தொடர்பில் சீனாவிடமிருந்து நற்செய்தி விரைவில்.

இலங்கையின் அவசரத் தேவைகளை சீனா சாதகமாக பரிசீலித்து வருவதாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் பிரதி அமைச்சர் சென் சோவ் தெரிவித்துள்ளார்.இலங்கை தொடர்பான நல்ல செய்தியை சீனா மிக விரைவில் அறிவிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 அவர் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை  அலரி மாளிகையில் சந்தித்த போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என்ற உத்தரவாதமும் கிடைத்தது.

 இலங்கை சீனாவின் சிறப்பு நண்பன்.தற்போதைய நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு எவ்வாறு ஆதரவளிப்பது என தமது நாடு ஆலோசித்து வருவதாகவும் தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.பல துறைகளில் சீன முதலீடுகள் எதிர்வரும் ஆண்டுகளில்  அதிகரிக்கும்.மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற இலங்கையின் முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் மிகவும் நட்புடன் செயற்படுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கு சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.தொழிற்சங்கங்கள் மற்றும் சோசலிச அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் உறவை வலியுறுத்திய பிரதமர், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை நினைவுகூர்ந்தார்.

 மேலும் கருத்து தெரிவித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சென் ஷு, கடன் மறுசீரமைப்பை சீனா ஆதரிக்கிறது என்றும் தெரிவித்தார்.

 பல சீன அமைச்சுக்களும் நிதி நிறுவனங்களும் நீண்டகாலமாக இந்த விடயத்தில் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் சாதகமான பதிலை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.பிரதமரின் தந்தை, பிலிப் குணவர்தன சீனாவின் சிறந்த நண்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை நட்புறவுச் சங்கத்தின் முதலாவது தலைவர் தாம் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.

 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமரிடம் தெரிவித்த அவர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கொள்கைகளின்படி நட்புறவுடன் வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேலும் வளர்த்துக்கொள்வதே திட்டம் என்றார்.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிச் செயலாளர், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பதில் சீனத் தூதுவர் ஹு வெய், பிரதிப் பணிப்பாளர் நாயகம், IDCPC, Xu Min, ஆலோசகர் Chen Xiangyuan, IDCPC பணிப்பாளர் லி ஜின்யான் மற்றும் தலைமை அரசியல் அதிகாரி  லுவோ சோங் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

-பிரதமர் ஊடகப் பிரிவு-



No comments: