பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகள் அதிரடி இடைநிறுத்தம்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையை பின்பற்றாத பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் அதிகாரிகளுடன் எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட வேண்டிய 105 பில்லியன் ரூபாவை வசூலிப்பது, தொடர்ந்து எரிபொருளை வழங்குவது மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து இயங்க வைப்பது தொடர்பாக தேவையான திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
No comments: