தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதியால் நிராகரிப்பு.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 கடந்த 25ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்ததுடன் அவரது இராஜினாமா கடிதமும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: