யுவதி கொலை - காரணம் வெளியானது !

நேற்று  (17) காலை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவி ஒருவரை அவரது காதலன் என கூறப்படும் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த மாணவியின் சடலம் கொழும்பு 7 குதிரை பந்தைய திடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட மாணவி கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3 வருட விஞ்ஞான பீட மாணவி எனவும், அவரை தாக்கி கொலை கொலைசெய்த காதலன் என கூறப்படும் சந்தேக நபரும் அதே பீடத்தில் பயிலும் மாணவன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் பின்னர் அவரது காதலன் என கூறப்படும் சந்தேக நபர் தப்பிச் சென்ற நிலையில் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உறவை முறித்துக் கொள்ளுமாறு மரணமடைந்த யுவதி குறித்த சந்தேக நபருக்கு தெரிவித்திருந்ததாகவும் யுவது வேறு ஒருவருக்கு சொந்தமாகிவிடுவார் என்ற நோக்கில் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. 
No comments: