சோசலிஸ தலைவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் விடுக்கும் சவால்

நமது நாட்டில் VIP சோசலிஸவாதிகள் என்ற ஒரு பிரிவினர் இருப்பதாகவும்,கிராமத்திற்கு வந்து தொழிலாளர் வர்க்கம்,சோசலிசம் என பேசினாலும் அவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் சிறந்த கல்வியைப் பெறுவதாகவும்,ஆனால் நமது நாட்டில் இலவசக் கல்வி நடைமுறையில் இருந்தாலும் அதில் ஒரு பேதம் நிலவுவதாகவும்,அந்த பேதத்தை இல்லாதொழிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்தை வழங்கும் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

VIP சோசலிஸவாதிகள் இருவரினது பாடசாலைக்கு நன்கொடையாக பஸ் வழங்கியதால் VIP சோசலிஸவாதிகள் கோபமடைந்துள்ளனர் எனவும்,பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி தம்பட்டம் அடிக்கும் அவர்களால் குறைந்த பட்சம் பாடசாலை பிள்ளைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு கூட வழங்க முடியவில்லை எனவும்,பஸ் வழங்குவதற்காக அவமதிப்பும்,கேலியும் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரேண்டட் ஆடைகளை அணிகின்ற அவர்கள் செய்யும் இந்த அவமானங்களைப் பற்றி தாம் கவலைப்படுவதில்லை எனவும்,பஸ்மேன் அல்ல  அதற்கு மேல் எவ்வாறான பெயர் சூட்டினாலும்
பாடசாலை மாணவர்களுக்காக இந்த பேரூந்து அன்பளிப்புச் செய்யும் பயணத்தை நிறுத்த மாட்டேன் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,முடிந்தால் இந்த பேரூந்துகள் வழங்குவதை நிறுத்திக் காட்டுமாறும் தெரிவித்தார்.

பஸ் வண்டிகளுக்குத் தீ வைக்கவும்,துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளவுமே அவர்களால் முடியும் எனவும்,இதற்கெல்லாம் தாம் அஞ்சப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

வெறுமனே கேலி செய்யாமல்,சேறுபூசமால் மக்களுக்கு சேவையாற்ற முடிந்தால் முன்வாருமாறு சோசலிஸவாதிகளுக்கு சவால் விடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுவதாகவும், சம்பளம் வழங்கவும்,தேர்தல் நடத்தவும் பணம் இல்லாவிட்டாலும்,2000 இலட்சம் செலவு செய்து சுதந்திர தின கொண்டாட்டம் நடத்த பணம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலை நிறுத்தவோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்கவோ எவருக்கும் எந்த சந்தர்ப்பமும் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரவப்பத்தான தேர்தல் தொகுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று(16) இடம் பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



No comments: