யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் பகுதியில் கடந்த 2023.01.05ம் திகதியன்று காட்டு யானை தாகுகுதலுக்குள்ளாகி இறந்த புவிதாசன் ரசிகனின் குடும்பத்திற்கு இன்று இழப்பீட்டுத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இழப்பீட்டு தொகையாகிய ரூபா 1 மில்லியன் ரூபாவில் முதற்கட்டமாக இன்று

(ஒரு இலட்சம் ரூபாய்100000/-)இறந்தவரின் மனைவியிடம் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனால் இன்று (17)திருக்கோவில் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.


 No comments: