பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அரச சேவையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பமாகியுள்ளது.  இதற்கான விண்ணப்பங்கள் கோருவது பெப்ரவரி 10ஆம் திகதியுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்குச் சென்று பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இந்தப் பரீட்சை மூலம் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 இதேவேளை, இந்த வருடத்தின் முதலாவது பிரிவேனா சபைக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.  எதிர்காலத்திலும் பிரிவேனா சபைகளை தீவிரமாக நடத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.No comments: