மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்ற நிலை.போதை மாபியா?

மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கலவரம் ஏற்பட்டுள்ளது.  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்று நேற்று இரவு மொரட்டுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே இந்த பதற்ற சூழ்நிலை அமைந்துள்ளது.


 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர்கள் குழுவொன்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கலவரமாக நடந்துகொண்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட குழுவினரை பொலிஸ் விளக்கமறியலுக்கு அழைத்துச் செல்வதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.


 மொரட்டுவ, மொரவத்தை, அங்குலான மற்றும் லுனாவ பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: