நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியை படம் பிடித்த இருவர் கைது.

பாராளுமன்றத்தை சுற்றி படம்பிடித்துக் கொண்டிருந்த இருவரை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளை காணொளி பதிவு செய்து கொண்டிருந்த போது  பிரதான நுழைவாயிலுக்கு அன்மையில் சந்தேக நபர்கள் இருவர் பாராளுமன்ற  பகுதியில்   கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு பாடலுக்கு தேவையான காட்சிகளை பெற வந்ததாக தெரிவித்தனர்.

 கண்டி மற்றும் யாழ்ப்பாணம் வாய்மன் வீதியில் வசிக்கும் 22 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments: