கரையோரப் பாதை புகையிரதப் போக்குவரத்து ஸ்தம்பிதம்.

கொழும்பு நோக்கி பயணித்த சமுத்திராதேவி கடுகதிப் புகையிரதம்  களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.  இதன் காரணமாக  களுத்துறை தெற்கு புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இயங்கும் புகையிரதம் ஒரு தண்டவாளத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இந்த நிலைமை காரணமாக மாத்தறை மற்றும் காலியில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.No comments: