சுதந்திர தினக் கொண்டாட்டத்தை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து போராட்டம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் இன்று காலி முகத்திடல் சுதந்திர விழா மைதானத்தில் பொது மக்களின் பணத்தினை செலவிட்டு சுதந்திர தின விழாவை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

 சுதந்திர தின விழாவையொட்டி கட்டப்பட்டு வரும் தற்காலிக கட்டுமான பணிகளுக்காக நடப்பட்ட இரும்பு கம்பங்களில் கருப்பு நாடா கட்டி போராட்டம் நடத்தினர்.

 ஆனால், போராட்டத்தை தொடர போலீசார் அனுமதிக்கவில்லை.  அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.No comments: