தீவிரமாக பரவிவரும் மர்ம உயிர் கொள்ளிநோய்! தற்போது 21 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் பரவி வரும் மர்ம நோயினால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள வாகான் என்ற மலைப் பகுதியில் இருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 பரவி வரும் நோய் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார திணைக்களம் ஏற்கனவே அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் பரவும் நோய் தொடர்பில் இதுவரை கிடைத்த தகவல்கள் மிகக்குறைவு என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பரவும் நோய் கோவிட் தொற்றுநோய் நிலைமையைப் போன்றது என்று ஆப்கானிஸ்தான் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 இதற்கிடையில், வடக்கு ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் சுவாச நோய்களால் குறைந்தது 50 குழந்தைகள் இறந்ததாக தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பக்தர் செய்தி நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்தது.



No comments: