2023 சனிப்பெயர்ச்சி பலன் துலாராசியினருக்கு எவ்வாறு அமையும்
துலாம்
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பும் நீங்கள், எதிர்நீச்சல் போட்டு பழகியவர்கள். அருவி நீர்போல அதிர்ந்து பேசாமல் பனிநீர் போல பாசமாய் பேசுவீர்கள். தர்மம், நியாயத்தின் பக்கம் நிற்கும் நீங்கள், பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான், இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். யோக பலன்கள் அதிகரிக்கும். சனி பகவான் இப்போது உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்து பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும்.

பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். இனி பணவரவு அதிகரிக்கும். வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசத்தை கோலாகலமாக செய்வீர்கள். உங்களை கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள்.
5-ம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள். இனி வலி நீங்கி வலிமை கூடும். தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தனாதிபதியும்-சப்தமாதிபதியும் செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. அரசு அதிகாரிகள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

No comments: