2023 சனிப்பெயர்ச்சி பலன் - கடக ராசியினருக்கு எவ்வாறு அமையும்




கடகம் 

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) மிரட்டல் உருட்டல்களுக் கெல்லாம் அஞ்சாதவர்களே, யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுர பலம் கொண்டது. சமையல் முதல் விஞ்ஞானம் வரை அனைத்தையும் ஆர்வமாய் அறிந்து கொள்வீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். 

எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது.

மகனின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வர வேண்டிய பூர்விக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். 

வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: 

சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்விக சொத்தில் பிரச்சினைகள் வந்து சரியாகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் தடையில்லாமல் முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும்.

No comments: