2023 சனிப்பெயர்ச்சி பலன் - சிம்மராசியினருக்கு எவ்வாறு அமையும்


சிம்மம் 

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்): எடுத்த எடுப்பிலேயே எதையும் முடிக்க விரும்பும் நீங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக வைத்திருப்பீர்கள். ஒரு குடும்பத்தையோ, இயக்கத்தையோ, தொழிற்கூடத்தையோ திறம்பட வழிநடத்தும் தலைமைப் பண்பு உங்களிடம் உண்டு. பேச்சிலே காரத்தைத் தூவினாலும் உங்கள் இதயத்தில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும்.

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.  

சனிபகவான் 7-ல் அமர்வதால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் வரக்கூடும். விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை கவனமாக கையாளுங்கள். மகனின் உயர் கல்விக்காக சிலரின் சிபாரிசை நாடவேண்டியிருக்கும். உத்தியோகம், வியாபாரத்தின்பொருட்டு குடும்பத்தை பிரியவேண்டி வரும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: 

சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவனங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான அதாவது சுக-பாக்யாதிபதியான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வாகனம் அமையும். திருமணம், காதுகுத்து, உபநயனம் என வீடு களைகட்டும்.

No comments: