SEUSL இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல்ம் - நிலைய உடன்படிக்கை கைச்சாத்து.

(அஷ்ரஃப்ஹான்)


தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் புரிந்துணர்வு உடன்படிக்கை நிகழ்வு (20) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பு சுமணசேகர மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபபேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களால் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டது.

கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி எம்.எம்.பாஸில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இங்கு உரையாற்றிய உபவேந்தர்,

குறித்த உடன்படிக்கையானது “பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வையும், அறிவையும் ஊட்டி, பிராந்திய, சமூக பிரச்சினைகளை கையாளச் செய்தல்” எனும் கூட்டு நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக நிகழ்ச்சி திட்டமானது சமூகவியல் துறை மாணவர்களை வலுவூட்டுவதை அடிப்படையாகக் கொண்டதாக அமையும்.

மாணவர்கள் வலுவூட்டப்படுவதன் ஊடாக இன்றைய இலங்கைச் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் போதைவஸ்து பாவனையின் அதிகரிப்பில் இருந்து விடுபடச் செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அதனூடாக நிலைத்து நிற்கக் கூடிய சமூக வலுவூட்டலை ஏற்படுத்த முடியும்.

ஆகவே, இந்த உடன்படிக்கையின் ஊடாக நிகழ்ச்சித்திட்டமானது ஏனைய பீடங்களுக்கும் பரவலடையச் செய்யப்பட வேண்டுமென உபவேந்தர் வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகர உரையாற்றுகையில்;

சர்வதேச அனுபவங்களோடு கூடிய உள்நாட்டில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய போதைவஸ்து பாவனையை தடுப்பதற்கான அணுகுமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தினார்.

இதன் பின்னர் மாணவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பளிக்கப் பட்டிருந்தது.

இந்நிகழ்வின் வரவேற்புரையினை சமூகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.எம் அய்யூப் நிகழ்த்தினார். ஒப்பந்தம் தொடர்பான பின்புலத்தை ஒய்வு பெற்ற உணவு மற்றும் மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் விளக்கினார்.

இங்கு இலங்கை மது மற்றும் போதைவஸ்து தகவல் நிலையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் ஏ.சி.றஹீம்,
சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.றிஸ்வான், பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், போதனை சாரா ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: