மட்டக்களப்பல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் மேதினத்தையிட்டு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன மத பேதமின்றிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்ற தொனிப் பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் குணரட்ணம் கிரிதரன் அழைப்பு விடுத்ததையடுத்து மட்டு காந்தி பூங்காவிற்கு முன்னால் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் காலை 10 மணிக்கு ஒன்றினைந்தனர்.

இதனையடுத்து கோட்டா வீட்டில் நாங்கள் றோட்டில், விவசாயத்தை விற்றுவிட்டு மன்னிப்பு கேட்பது சரியா, தொழிலாளர் உரிமை மதிக்கப்படவேண்டும், நாட்டை விற்ற ராஜபஷ குடும்பஆம வெளியேறு நாங்கள் சந்தோசமாக வாழவிடு,

அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே, போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்ததியவாறு நகர் பஸர்வீதியில் ஊர்வலமாக மாட்டுவண்டிலுடன் ஆரம்பித்து நகர் மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தை வந்தடைந்து காந்திபூங்காவிற்கு முன்னால் அரசு எதிர்பு கோஷங்களை எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.









Post a Comment

0 Comments