பணி பகிஷ்கரிப்பல் தொழிற்சங்கங்கள்

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இன்று(10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது

சுகாதார ஊழியர்களும் நேற்று(09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்

அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று(10) காலை 8 மணி வரை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர், வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

0 Comments