அம்பாறை பாலமுனை பிரதேசத்தில் நேற்றிரவு பதற்ற நிலை ?


அம்பாறை பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலீஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிலில் தலைக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்த நபரை கடமையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் நிறுத்தியதாகவும் அவர் நிறுத்தாமல் சென்றதனால் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்கள் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பொலீஸ் சோதனைச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர் இதன் போது பொது மக்களுக்கும் பாதுகாப்பு கடமையில் இருந்வர்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது.

இதன் போது காயமுற்றவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்

Post a Comment

0 Comments