நாளைய தினமும் மின் விநியோகத்தடை

நாளைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் காலை 09 மணி முதல் மாலை 05.30 வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த வலயங்களில் மாலை 05.30 முதல் இரவு 09.30 வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடைஅமுல்படுத்தப்படவுள்ளது. மேலும், M, N, O, X, Y மற்றும் Z ஆகிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 05 மணி முதல் காலை 08 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

 

Post a Comment

0 Comments