அத்தியாவசிய தேவைகளுக்கு விசேடமாக எரிபொருள் வழங்க நடவடிக்கை


இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று முதல் குறித்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட சேவைகளுக்கு மாவட்டரீதியில் தெரிவு செய்யப்பட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய உரையில் ஒரு நாளைக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என விடையத்திற்கு பொறுப்பான அமைச்சர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments