நாளை 5 மணி நேர மின்வெட்டு அமுல்


நாடளாவிய ரீதியில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் ஐந்து மணித்தியால மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

 இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வலயங்களின் அடிப்படையில் பகல் வேளைகளில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடங்களும், இரவு வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

 இதன்படி, A முதல் W வரையான 20 வலயங்களில் முற்பகல் 8 மணி முதல் இரவு 11.30 வரையான காலப்பகுதியில் இவ்வாறு 5 மணிநேர மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 

 அத்துடன், M முதல் Z வரையான வர்த்தக வலயங்களில் காலை 5 மணி முதல் 8.20 வரையான காலப்பகுதியிலும், CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9.20 வரையான காலப்பகுதியிலும் தலா 3 மணி நேரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்தமை ஆகியன இதற்கான காரணங்களாகும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

No comments: