ஜனாதிபதி,பிரதமர் பதவி துறக்கும்வரை போராட்டம் தொடரும் - திகாம்பரம்

 


எஸ்.சதீஸ்

அரசுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் முன்னெடுத்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளது - என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று வேலை நிறுத்தம் மேற்கொள்ளுமாறு நாம் எமது உடன்பிறப்புகளான தோட்டத் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைக்கு செவிசாய்த்து இன்று தோட்டத் தொழிலாளர்கள் முழுமையான ஆதரவை வழங்கி இருக்கின்றார்கள்.

அவர்களுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளை இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஏனையோருக்கும் எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி துறக்கும் வரை எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments