மலையகம் - கொட்டகையின் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுப்பு

 (க.கிஷாந்தன்)

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கொட்டகலை நகரில் இன்று மதியம் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. 

அட்டன் - நுவரெலியா பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்து கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கொட்டகலை நகர வாசிகள், சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

 மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர்.

No comments: