வாகன உதிரிப்பாகங்களுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ?

 


நாட்டில் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடே இந் நிலைமைக்கு காரணம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன .  

அத்துடன், சந்தையில் வாகன உதிரிப் பாகங்களின் விலை வேகமாக உயர்ந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

 இந்நிலையில் கொழும்பு முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர, தற்போதைய நிலைமை காரணமாக தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உதிரிப் பாகங்கள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு பகுதி பயணிகள் பேருந்து துறை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

உதிரிப் பாகங்கள் தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், ஒட்டுமொத்த போக்கு வரத்து துறையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments