ஆலையடிவேம்பில் மாணவர்கள் கடத்தப்பட்டனரா ? வதந்தியையடுத்து பரபரப்பு

 (கனகராசா சரவணன்) 


அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 3 பேரை கடத்தில்காரால் கடத்தி செல்லப்பட்டதாக ஏற்பட்ட வதந்தியையடுத்து பாடசாலைகளுக்கு முன்னாள் பெற்றோர் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதுடன் பாடசாலையில் இருந்து தமது பிள்ளைகளான மாணவர்களை கூட்டிச் சென்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை (28) பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள கோளாவில் பாடசாலையில் கல்விகற்றுவரும் 3 மணவர்களை கடத்தி செல்லப்பட்டதாக வதந்தி பரப்ப்பட்டதையடுத்து வீடுகளில் உள்ள பெற்றேர்கள் வீடுகளை விட்டு பதற்றத்துடன் வெளியேறி அவசர அவசரமாக பாடசாலைகளை நோக்கி சென்று பாடசாலையை முற்றுகையிட்டு தம் பிள்ளைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரினர். 

இதனையடுத்து அந்த பகுதியில் சில மணிநேரம் பதற்றம் ஏற்பட்டதுடன் பாடசாலையில் இருந்து எந்த மாணவர்களும் வெளியேறவில்லை அவர்களுக்கு 3 தவணை பரீட்சை இடம்பெறுகின்றது எவரும் கடத்தப்படவில்லை என பாடசாலையை முற்றுகையிட்ட பெற்றோருக்கு தெளிவூட்டி இது ஒரு வதந்தி எனவே பெற்றோர் பதற்றப்படவேண்டாம் பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் பெற்றோர் அறுதல் அடைந்தாலும் பாடசாலை முடியம்வரை அங்கு காத்திருந்து தமது பிள்ளைகளை கூட்டச் சென்றனர்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதா நெருக்கடியினால் பணகஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவே இவ்வாறு கொள்ளையர்கள் கொள்ளையிடுவதற்காக இவ்வாறு வதந்தியை பரப்பிவிட்டு பொதுமக்கள் அது தொடர்பாக பதற்றத்துடன் வீடுளை பூட்டாது அவசரத்தில் வீட்டை விட்டு வெளியேறும் போது அங்கிருந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது 

எனவே பொதுமக்கள் அதிக விழிப்புடன் அசயற்படுமாறும் அவ்வாறன சந்தர்ப்பத்தில் பொலிசாரை நாடுமாறு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

No comments: