திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் விசேட வேலைத்திட்டம்

திருக்கோவில் பிரதேசத்தில் இன்றைய தினம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினரும் இராணுவத்தினரும் பொலிஸ்சாரும் இணைந்து திருக்கோவில் இதுவரை கொவிட்19 தடுப்பூசிகளான 01ஆம்,02ஆம்,03,ஆம் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உப காரியாலயங்களிலும் மற்றும் பிரதான வீதிகளில் உள்ள இராணுவ சோதனைச்சாவடிகளிலும் முன்னெடுக்கப்பட்டது .

மேலும் இந் நிகழ்வில் பிரதான வீதிகளில் பயணித்த பாதசாரிகளில் தடூப்பு அட்டைகளும் பரிசோதனைக்கு உட்படுதப்பட்டதுடன் தடுப்பூசி பெறதாவர்களுக்கு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...

மேலும் எதிர் வரும் காலங்களில் பாதைகளில் நடமாடுவோர்களின் தடுப்பூசி அட்டைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் தடுப்பூசி முறையாக பெறாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந் நிகழ்வின் போது திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் அவர்கள் தெரிவித்தார்.

ஜே.கே.யதுர்ஷன்

No comments: