நீதவான் வீடு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 7 பேர் கைது



(கனகராசா சரவணன்)

அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட கொள்ளை கோஷடியைச் சேர்ந்த இரு பௌத்த தேரர்கள் உட்பட 7 பேரை விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளதுடன் நீதவான் வீட்டில் கொள்ளையிட்ட தாலிக்கொடி உட்பட 55.5 பவுண் தங்க ஆபரணங்கள மீட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள பிரதான சூத்திரதாரி பாதாள கோஷ;டி தெமட்டகொடை சமந்தவின் கையாளான குணா அல்லது சத்தியா என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை சேர்ந்த குணசீலன் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இன்று புதன்கிழமை (09) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 வீடுகளிலும் டிசம்பர் 18ம் திகதி நள்ளிரவு நீதவான் வீட்டிலுமாக ஒருமாதத்தில் 4 வீடுகளின் யன்னல்களை கழற்றி உள் நுழைந்த கொள்ளைக் கோஸ்ரியனர் நித்திரையில இருந்த குடும்ப பெண்களின் கழுத்தில் இருந்த சுமார் 30 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக கிழக்கு மாணான சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே. டபிள்யூ கமல் சில்வா வின் ஆலோசனையில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் முதலில் 3 பொலிஸ் அதிகாரிகள் தலைமையில் 3 பொலிஸ் குழுக்களை அமைத்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்த பொலிஸ் குழுவிற்கு தலைமைதாங்கிய மூன்று சப் இன்பெக்ஸடர்களையும் ஒன்றினைத்து சப் இன்பெக்கடாகளான அசீம், பி.பிரகலாதன், பகீரதன் மற்றும் பொலஜஸ் சாஜன்கள் 6 பேர் உட்பட 9 பேர் கொண்ட 4 வது விசேட பொலிஸ் குழுவினை அமைத்தனர்.

அந்த விசேட பொலிஸ் குழுவின் விசாரணையில் கடந்த டிசம்பர் 30 ம் திகதி முதலில் திருக்கோவில் 2ம் பிரிவு நல்லையா வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்துரு என்றழைக்கப்படும் மருமமுத்து அருந்தரகுமாரை கைது செய்து அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொள்ளைக் கோஷ;டி பிரதான சூத்திரதாரியான சத்தியா மற்றும் அக்கிரம் ஆகிரோருடன் பௌத்த தேரர்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து 31ம் திகதி இரவு பௌ;ததேரர்களை தேடி தமண பிரதேசத்திலுள்ள தாம்போதி விகாரைக்கு சென்று விசாரணையில் கடந்த 12 ம் திகதி கொழும்பில் இருந்து குறித்த இரு பௌத்த தேரர்களில் ஒருவர் வந்து தங்கியுள்ளதுடன் அடுத்த தேரர்; 28 ம் திகதி குறித்த விகாரைக்கு வந்து தங்கிருந்துள்ளதாகவும் வெளியே காரில் சென்றதாக தெரியவந்ததையடுத்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

இந்த நிலையில் போதை பொருள் பாவனைக்கு அடிமையான அனுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் பௌத்த தேரர் ஒருவரும் கொழும்பு விகாரை ஒன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் உட்பட இருதேரர்களும் போதைபொருள் வியாபாரியான சத்தியாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இரு தேரர்களுக்கு போதை பொருள் தேவை ஏற்படும் போது சத்தியா வழங்கி வந்துள்ளதுடன் சத்தியாவின் பாவனைக்கு போதைபோருள் தேவை ஏற்படும் போது இரு தேரர்களும் சத்தியாவுக்கு போதை பொருளை வழங்கி வந்துள்ளதுடன் அவனுடன் சேர்ந்து இரு தேரர்களும் புதையல் தோண்டும் மற்றும் கொள்ளை நடவடிக்கையில்; ஈடுபட்டுவந்துள்ளனர்.

இதன் போது குறித்த விகாரையில் கண்காணிப்பில் ஈடுபட்ட விசேட பொலிஸ் குழுவினர் முதலாம் திகதி இரவு தேரர்கள் இருவரும் காரில் வெளியேறிச் செல்வதை அவதாணித்ததையடுத்து காரை பின் தொடர்ந்து சென்ற நிலையில் சம்மாந்துறை நகர்பகுதில் வைத்து பின் தொடர்ந்து வந்த பொலிசாரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு அங்கிருந்து தேரர்களின் கார் அல்லிமுல்லை வீதியால் நிந்தவூர் பிரதான வீதிக்கு சென்று அங்கிருந்து காரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதிக்கு சென்று சத்தியாவுக்காக தேரர்கள் காத்திருந்தனர்.

அப்போதுபல்சர் மோட்டார் சைக்கிளில்  சத்தியாவும் அக்கிரம் ஆகியோர்  தேரர்கள் காத்திருக்கும் வெட்டுவாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ள நிலையில் காரை பின் தொடர்ந்த விசேட பொலிஸ் குழுவிற்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போது கொள்ளையர்கள் தேரர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை கண்ட பொலிசாருக்கு ஆச்சரியம் ஏற்பட்ட நிலையில் கொள்ளைகாரனான அக்கிரத்தை முதலில் பொலிசார் மடக்கி பிடிக்க முற்பட்டபோது பொலிசார் மீது சத்தியா பிஸ்டலினால் துப்பாகி பிரயோகம் மேற்கொண்டான் அது குறிதவறி அக்கிரம் மீது குண்டு பாய்ந்ததில் அக்கிரம் படுகாயமடைந்ததையடுத்து அங்கிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சத்தியாவும் தேரர்களின் கார் சாரதியும் தப்பி ஓடியுள்ளனர்.

இதன்போது இரு பௌத்த தேர்களை கைது செய்ததுடன் அவர்களின் காரில் இருந்து நீதவானை தாக்கிய துவிச்சக்கரவண்டி சொக்கட் பொல் மற்றும் போதைப் பொருள்களை மீட்டதுடன் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொள்ளையனான அக்கிரத்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாரலயில் அனுமதித்ததுடன் அவனின் உடமையில் இருந்து 5 கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டனர்.

இந்த கொள்ளைகளின் பிரதான சூத்திராரியான இந்த சத்தியா யார்?

 மட்டக்களப்பு களுதாவளை முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த குணா அல்லது கராட்டி சத்தியா என்றழைக்கப்படும் முருகமூர்த்தி குணசீலன் 44 வயதுடைய ஒரு பட்டதாரியும் கராட்டி பயிற்சி பெற்ற இவன் முன்னால் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று வெளியேவந்த இவன் பாதாள கோஷ;டியைச் சேர்ந்த தெமட்டகொட சமந்தவின் கையாளாக செயற்பட்டு வந்ததுடன் திருக்கோவில் மற்றும் கொழும்பு வத்தளையில் திருமணம் முடித்துள்ளதுடன் போதைபொருள் வியாபாரம் மற்றும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளான்.

கடந்த வருடம் களுத்துறை சிறைச்சாலை வாகனத்தின் மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இவன் 2017 அவுஸ்ரேலியாவுக்கு ஆட்கடத்தல் தொடர்பாக 28 இலச்சம் ரூபாவுடன் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் பிணையில் வெளிவந்துள்ளான்

அதேவேளை பல குற்றச் செயல்கள் தொடர்பாக இலங்கையில் பல பொலிஸ் நிலையங்களின் பொலிசாரால் தேடப்பட்டுவருகின்ற இவன் காலையில் இலங்கையில் நிற்பான் இரவில் கடல்வழியாக படகில் இந்தியாவில் நிற்பவனான இவனுக்கு மட்டக்களப்பில் சுமார் 65 க்கு மேற்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளும் வழக்குகளும் உள்ளது.

இந்த நிலையில் குற்றச் செயல் காரணமாக சத்தியா கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் இருக்கும் 2014ம் ஆண்டு இரு மோட்டர்சைக்கிள் திருட்டு சட்டவிரோத துப்பாகியான செட்கண் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பாக அம்பாறை வாங்கமத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அக்கிரம் என்பவனின் தந்தையான தச்சுதொழிலாழியான அக்கரைப்பற்று 6 ம் குறிச்சியைச் சேர்ந்த தம்பி ஓடாவி என்றழைக்கப்படும் ஆதம்லெப்பை அப்துல் ரகீம் சிறையில் அடைக்கப்பட்டபோது சிறையில் தம்பி ஓடாவிக்கும் சத்தியாவுக்கும இடையே நட்பு ஏற்பட்டது.

இருவரும் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த நிலையில் இருவரும் சேர்ந்து பல கொள்ளைச் சம்பவங்களிலும் போதை பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டுவந்த நிலையில் சத்தியாவின் கொள்ளை நடவடிக்கைக்காக தம்பி ஓடாவி கொழும்பில் ஆர்பிகோ நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ள தனது மகனான அக்கரத்தை வரவழைத்து சத்தியாவுக்கு உதவிபுரியுமாறு மகனிடம் தெரிவித்து சத்தியாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் மூடிய யன்னல்களை கழற்றி பின்னர் கிறில்களை கழற்றுவதில் திறமைவாய்ந்த அக்கிரத்தை சத்தியா இணைத்துக் கொண்டு கொள்ளையிடும் வீட்டின் யன்னல் மற்றும் கிறில்களை கழற்றுவதே அக்கிரத்தின் பணி ஒரு யன்னல் கிறீலை கழற்றுவதற்கு 60 ஆயிரம் ரூபா பணத்தை சத்தியா வழங்கி வந்துள்ளதுடன் கொள்ளையடிக்கப்படும் வீடுகளை அந்தந்தபகுதியில் உள்ள வேவுபார்ப்பதற்கான கொள்ளையர்கள் மூலம் வீட்டின் முழு தகவல்கலை தெரிந்து கொண்டு சத்தியா கொள்ளையிட்டு வந்துள்ளான்.

அக்கரைப்பற்று நீதவான் வீடு உட்பட ஆலையடிவேம்பில் பொதுசுகாதார உத்தியோகத்தர் ஒருவரின் வீடு கோளாவில் பகுதியில் ஒருவீடு உட்பட்ட வீடுகளை தம்பி ஓடாவியார்( தச்சுதொழிலாளியான அவர் குறித்த வீடுகளில் கதவு யன்னல் பொருத்தியமைக்மைய வீட்டின் உட்பகுதி தொடர்பாக தெரிந்த அவர் சத்தியாவுக்கு வேவுபார்த்து கொடுத்த நிலையில் அங்கு யன்னல் கிறில்களை கழற்றி அங்கு நித்திலைரயில் இருந்த பெண்களின் தாலிக் கொடிகளை வெட்டி கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து காரைதீவு வெட்டுவாய்கள் பகுதில் இருந்து தப்பி ஓடிய தேரர்களின் கார்சாரதியை 2ம் திகதி இரவு கைது செய்ததுடன் கைது செய்யுப்பட்ட இரு தேரர்கள் மற்றும் படுகாயமடைந்த கொள்ளையன் அக்கிரம் ஆகியோரை நேற்றுவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்துவந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கி விற்றுவந்தவரும் சத்தியாவுடன் நெருங்கிய தொடர்புடைய செங்கலடி நகைக்கடை ஒன்றில் தொழில் புரிந்துவருட செங்கலடி றமேஸ்புரத்தைச் சேர்ந்த கண்ணன் என்றழைக்கப்படும் யோகராஜா பரமலிங்கம் என்பவரை கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொள்ளையடிக்கப்பட்டு மட்டக்களப்பில் விற்கப்பட்ட 45 பவுண் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதுடன்

நீதவான் வீட்டில் கொள்ளையடித்த 11.5 பவுண் தாலிக் கொடியை கொழும்பு செட்டியாதெருவில் இரு கடைகளில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள் ளதையடுத்து இதுவரை 56.5 பவுண் தங்க ஆபரணங்களை மீட்டுள்ளனர்

அதேவேளை இந்த கொள்ளைக்குழுவுடன் தொடர்புடைய விநாயகபுரத்தை சேர்ந்த நபர் 6ம் திகதி கைது செய்ததையடுத்து இதுவரை இரு பௌத்ததோர்;கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளதுடன் செங்கலடி றமேஸ்புரத்தைச் சேர்ந்த கண்ணன் என்றழைக்கப்படும் யோகராஜா பரமலிங்கம், விநாயகபுரத்தை சேர்ந்த முன்னாள் போராளியான ராஜன் என்றழைக்கப்படும் இருதயராஜன் ஆகிய இருவரையும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைத்து விசாணை மேற்கொண்டு வருவதாகவும் ஏனைய 5 பேரையும் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளர்.

தலைமறைவாகியுள்ள பிரதான சூத்திரதாரியான சத்தியா, மற்றும் தம்பி ஓடாவியார் ஆகிய இருவரையும் பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

No comments: