சொய்சாபுர தீ விபத்தில் சிக்கி இளைஞர் பலி

 கல்கிஸை சொய்சாபுர அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வீடொன்றில் நேற்று (07) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் களுபோவில வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந் துள்ளார்.

உயிரிழந்தவர் மொரட்டுவ, சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப் பட்டுள்ளார்.

நீதவான் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை இன்று (08) இடம்பெறவுள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: