திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் செவிமடுப்பாளர்களை உருவாக்குவதற்கான செயலமர்வு

ஜே.கே.யதுர்ஷன் 

பிரதேச மட்டத்தில் செயற்திறன் மிக்க செவிமடுப்பாளர்களை உருவாக்குவதற்கான செயலமர்வு உளவளத்துனைப்பிரிவின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் அவர்களின் வழிகாட்டலில் நேற்றைய தினம் இடம் பெற்றது 

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்டபட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான பிரதேச மட்டத்தில் செயற்திறன் மிக்க செவிமடுப்பாளர்களை உருக்வாக்குதல் எனும் திட்டத்தின்கீழ் இடம்பெற்ற செயலமர்வு திருக்கோவில் பிரதேச செயல ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

 நிகழ்வில் சமுகப்பாதுகாப்பு மற்றும் சமுகத்தில்  உள்ள மக்களின்  பிரச்சினைகள்  பிணக்குளுக்கு எவ்வாறு தீர்வு காணல் பற்றிய விளக்க உரையும் இடம்பெற்றது.

மேலும்  நிகழ்வின் வளவாளர்களாகஏ.ஏ.தீன்முகம்மத்

மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர்

மாவட்ட செயலகம் அம்பாறை மற்றும் எஸ்.ஆப்தீன்

உளவளத்துணை உத்தியோகத்தர்

பிரதேச செயலகம் திருக்கோவில் ஆகியோர் இன் நிகழ்வின் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.


No comments: