மின்சார சபையின் பொறியியலாளர்கள் நாளை சட்டப்படி வேலை நிறுத்தம்


ட்டப்படி வேலை நிறுத்தத்தை நாளை நண்பகல் முதல் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய பொது முகாமையாளரை பதவி நீக்காவிட்டால் சட்டப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டத்தினால் மின் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மின்சார சபையின் பதில் பொதுமுகாமையாளர் சுகந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் ஆதரவு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: