ஊழியர் இழப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம்கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது திடீர் விபத்துக்களால் பாதிக்கபடும் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் அனுகூலங்கள் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில்  1934 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க ஊழியர் இழப்பீட்டுக் கட்டளைச்சட்டம் (139 ஆம் அத்தியாயம்) திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதுடன் குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments: