மட்டு-பாலைமீன்மடு பகுதில் மதுபோதையில் சண்டையில் ஒருவர் காயம் வீடு ஒன்று தீக்கிரை
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டத்தில் இரு குழுக்கழுக்கிடை மது போதையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இருகுழுவினரும் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை (01) ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் சண்டையாக மாறியதையடுத்து 119 பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றதையடுத்து இரு குழுவினரும் சாமாதானமாகினர்.
இதில் காயமடைந்த ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் இருகுழுக்களையும் பொலிசார் சண்டை போடக்கூடாது என எச்சரித்து சென்றனர்.
இந்த நிலையில் இந்த குழு ஒன்றுடன் தொடர்புபட்ட நாகநாதன் நவநீதனின் குடும்பத்தினர் பயத்தில் அருகிலுள்ள வீட்டில் நேற்று இரவு சென்று தங்கிருந்த நிலையில் குறித்வரின் இன்று அதிகாலையில் வீட்டை இனம் தெரியாத ஒருவர் தீயிட்டுள்ளதையடுத்து வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: