ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்குமாகாண உதவி ஆணையாளராக பதவியேற்பு


இலங்கை நிருவாக சேவை அதிகாரியான திரு.இ.திரவியராஜ் அவர்கள் ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டு இன்றைய தினம் 2022.01.22 மட்டக்களப்பில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்

இவர் இலங்கை நிருவாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் (தமிழ்மொழி) 1ம் இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது 

வெல்லாவெளி, நிந்தவூர், அம்பாரை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியவர்.

அதன் பின்னர் பொத்துவில் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

No comments: