ராஜகிரியவில் சிறுமி துஸ்பிரயோகம் டிக்டாக் பிரபலம் கைதுராஜகிரிய பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் டிக் டொக் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரிய - கலபலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த டிக் டொக் பிரபலமான 'கிரி சமன்' எனும் ஓஷத நிலான் (21) என்பவர் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

சுமார் இரண்டு வாரங்கள் குறித்த சிறுமி முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் அவரின் நண்பரும் நேற்று (15) கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 19 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

0 Comments