மலையகத்தில் இந்திய அரசாங்கத்தின் தனி வீடு திட்டம் மக்களிடம் கையளிப்பு(க.கிஷாந்தன்)

இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தி அதனை பயனாளிகளுக்கு கையளிப்பதற்கான திறப்பு வழங்கும் வைபவம் 15.01.2022 அன்று கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.

இதில் கடந்த அரசாங்க காலத்தில் மலையக பிரதேசங்களில் இந்திய நிதி உதவியின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு ஆட்சி மாற்றத்தின் காரணமாக இடம்பெறாமல் இருந்த வீதி, குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு குறைபாடுகள் தீர்க்கப்படாமல் காணப்பட்டது.

அதனை நடைமுறை ஆட்சியில் தோட்ட வீடமைப்பு அமைச்சின் ஊடாக நிதிகள் ஒதுக்கப்பட்டு, உட்கட்டமைப்பு வசதிகளை பூரணப்படுத்தப்பட்ட ஆயிரம் வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அத்தோடு, மலையக பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.

இதில் இதில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரும் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கண்டிக்கான இந்திய உதவி தூதுவர் திருமதி.ஆதிரா, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Post a Comment

0 Comments