தங்க சங்கிலிகளை அறுத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்
( கனகராசா சரவணன் )
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பு, கொம்மாந்துறை மற்றும் 10 கட்டை வீதியில் சென்ற பெண்களின் தங்க
ஆபரணங்களை கொள்ளையிட்டுவந்த கைது செய்யப்பட் செங்கலடியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று சனிக்கிழமை (01) உத்தரவிட்டார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆறுமுகத்தான்குடியிருப்பு , 10ம் கட்டை வீதி, கொம்மாந்துறை பஸ்தரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் தனியாக வீதியில் சென்ற பெண்களை பின்தொடர்ந்து அவர்களின் கழுத்தில் இருந்த தலா ஒவ்வொன்றும் 2 பவுண் நிறை கொண்ட 6 பவுண் தங்கச் சங்கிலிகளை கழுத்தில் இருந்து அறுத்தொடுத்து கொள்ளையிட்டு சென்ற 3 சம்பவங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது .
இந்த நிலையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை (31) செங்கலடியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அறுந்த தந்கசங்கிலி ஒன்றை விற்பதற்கு ஒருவர் சென்றிருந்தார் அப்போது அங்கு நின்ற இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒருவர் அவர் மீது சந்தேகம் கொண்டு பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.
இதனையடுத்து அங்கு பொலிசர் சென்றதை கண்டு நகையை விற்க சென்றவர் தப்பி ஓடிய நிலையில் அவரை இராணுவ புலனாய்வாளர் துரத்திச் சென்று மடக்கி பிடித்ததையடுத்து பொலிசார் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் இவரை நேற்று சனிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டபோது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
No comments: