ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று 05 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம்


2022 ஜனவரி மாதம் முதல் பிரதேச வாரியாக கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் கீழ் வசிப்பவர்களில் சிலருக்கு  COVID-19 தொற்று ஊறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி.எஸ்.அகிலன் தெரிவித்தார்.

இன்று ஆலைடியவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 05 நபர்களுக்கு தொற்று ஊறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

மேலும் இன்று இனங்காணப்ப்ட தொற்றாளர்கள் வைத்திய தேவைக்காக வைத்தியசாலை சென்றவேளை பரிசோதனையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுவரையில் ஆலையடிவேம்பு பகுதியில் மொத்தமாக 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஓமிக்றோன் திரிவு இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வைத்தியர் திருமதி.எஸ்.அகிலன் தெரிவித்தார்.

மக்களிடையே தொற்றுருதியானவர்கள் கணிசமாக உலாவுவதாகவும் மக்கள் இது தொடர்பில் மிக அவதாகத்துடன் இருக்குமாறும் அவர் மேலும் குறிப்பிட்டார்

No comments: