கேஸ்-அடுப்பு வெடித்ததில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி.ஸ்ரீபாத மலை உச்சிக்கு அருகாமையில் உள்ள வர்த்த நிலையம்
ஒன்றில் கேஸ் அடுப்பு வெடித்ததில் இளைஞன் ஒருவன் பலத்த காயங்களுக்கு
உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 23.12.பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த வர்த்தக நிலையத்தில் உணவு சமைத்து
கொண்டிருந்த வேலையில் குறித்த அடுப்பு வெடித்துள்ளதாகவும் காயங்களுக்கு உள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு. காயமடைந்த
இளைஞன் குருவிட்ட பகுதியை சேர்ந்த 27வயது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நல்லதன்னி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

No comments: