உணவகங்களில் பால், தேனீர் விற்பனை கேள்விக்குறி


பால்மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் விற்பனையில் இருந்து

விலகுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால்மா விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கோப்பை பால் தேநீரை 80 ரூபாவுக்கு விற்பனை செய்ய நேரிடும் என அதன் செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

பால் தேநீரின் விலையை அதிகரித்து மக்களை சிரமத்துக்குள்ளாக்குவதை விட, பால் தேநீர் விற்பனையிலிருந்து விலகுவது நன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments: