மட்- வாகனேரியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் 60 போத்தல் கசிப்புடன் கைது

 (கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி குடாமுனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 25 வயதுடைய கசிப்பு வியாபாரி ஒருவரை 60 போத்தல் கசிப்புடன் இன்று வியாழக்கிழமை (30) பகல் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல்; ஒன்றிற்கமைய சம்பவதினமான இன்று பகல் குறித்த பகுதியிலுள்ள வீட்டை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர் இதன் போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 25 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த 60 போத்தல் கொண்ட கசிப்பை மீட்டனர்.

இதில் கைது செய்யபபட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

No comments: