இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கம்.

தனியார் விமானப் பயிற்சி நிறுவனமொன்றுக்கு சொந்தமான இலகுரக விமானம் ஒன்று பயாகலைக்கும் பேருவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம். பயிற்சி பயிற்றுவிப்பாளர் மற்றும் விமானி மாத்திரமே விமானத்தில் இருந்ததாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் விமானப்படையின் இரண்டு சிறப்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.


No comments: