தொழில் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்புகொவிட் 19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை மற்றும் சுகாதாரப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய தற்போது தொழில் திணைக்களத்திற்குரிய தொழில் அலுவலகம் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொழில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (http://www.labourdeopt.gov.lk) ´அப அமதன்ன´ இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைத்தொடர்பு ஊடகங்கள் மூலம் (e-mail/whatsapp/viber) தொழில் சட்டங்களுக்களுக்கு அமைவான எந்தவொரு விடயம் தொடர்பான எழுத்துமூலமான முறைப்பாடுகள் அல்லது எழுத்து மூலமான விசாரணையை தாங்கள் பணிபுரியும் அல்லது பணிபுரிந்த நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தில் தொழில் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments