கொவிட் 19 தொடர்பில்- ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவிப்பு

 ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலைய பிரிவின் கீழ் இன்றை தினம் 02 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டா.எஸ்.அகிலன் தெரிவித்தார். 

மேலும் ஆலையடிவேம்பு பிரதேச மக்கள்  அவதானத்துடன் செயற்படுமாறும்  வெளிப்பிரதேசங்களில் இருந்து வருகைதரும் நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மூன்றாம் அலையில் இதுவரையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அன்ரிஜன் மற்றும்  பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments