திருக்கோவில் பகுதியில் எழுமாறான பீ.சீ.ஆர் பரிசோதனை


இன்று(19) அம்பாறை  திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேசசுகாதார வைத்திய அதிகாரியின் மேற் பார்வையில்  மேற்கொள்ளபட்ட எழுமாறான  PCR,மற்றும் ரொபட் அன்ரீஜன் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது

மொத்தமாக 26 பேருக்கு கொவிட்19 பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன் 20 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி ப. மோகனகாந்தன் தெரிவித்துள்ளார்.

20 பேருக்கான பீ.சீ.ஆர் பரிசேதனையின் முடிவுகள் எதிர்வரும் திங்கட்கிழைமை கிடைக்கப் பெறும் என திருக்கோவில் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி ப. மோகனகாந்தன்  மேலும் குறிப்பிட்டார். 
Post a Comment

0 Comments